தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.17) தாக்கல் செய்யப்பட்ட 2026-27 இடைக்கால பட்ஜெட்டில், தூய்மை பணியாளர்களுக்கு புதிதாக 30,000 வீடுகள் கட்டித்தரப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்காக ரூ.2,491 கோடியும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்காக ரூ.3,934 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.