அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் சிக்கி ஈரான் நாட்டில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 28 முதல் இதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தடயவியல் துறை தெரிவித்துள்ளது. மேலும், இறந்தவர்களில் சுமார் 40% பேரின் உடல்களை அடையாளம் காண முடியாமல் இருப்பதால், தடயவியல் ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் சர்வதேச அளவில் கவலை ஏற்படுத்தியுள்ளது.