குஜராத்தில், பாபுபாய் என்ற காவலர் செய்யாத குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 30 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தியுள்ளார். குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்ட அடுத்த நாளே அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ரூ.20 லஞ்சம் பெற்றதாக அவர் மீது வழக்குப்பதிந்து, 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கு சுமார் 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், கடந்த பிப்.04 அன்று விடுதலை செய்யப்பட்டார்.