குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியது. அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு நேரடியாக செல்லும் ஏர் இந்தியா ட்ரீம்லைனர் ரக விமானம் 242 பேருடன் புறப்பட்டுள்ளது. கிளம்பிய சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போது வரையில் 30 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தக்கட்ட தகவல் விரைவில் வெளிவரும்.