நாமக்கல் அரசு மகளிர் விடுதியில் 30 பேருக்கு உடல் நலக்குறைவு

நாமக்கல்-மோகனூர் சாலையிலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவிகள் விடுதியில், நேற்று மதிய உணவாக வழங்கப்பட்ட சாதம் மற்றும் மீதமான பரங்கிக்காய் சாம்பாரைச் சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 9 உணவு மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். முடிவுகள் வந்த பின்னரே உண்மைக் காரணம் தெரியவரும்.

தொடர்புடைய செய்தி