மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம் குவானர் பார்டே நகரில் நெடுஞ்சாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் பயணம் செய்த 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.