நைஜீரியாவில் நடந்த கோர விபத்தில் 30 பேர் உயிரிழப்பு

வடக்கு நைஜீரியாவின் கானோ மாநிலத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 30 பேர் வரை உயிரிழந்தனர். கெசாவா பகுதியில் உள்ள குவானர் பார்டே நெடுஞ்சாலையில் நேற்று (பிப்.08) நடந்த இந்த விபத்தில், அதிவேகமாக வந்த டிரெய்லர் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். லாரி கவிழ்ந்தபோது பலர் தூக்கி வீசப்பட்டனர். பலர் காயமடைந்து, சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி