எலி பேஸ்டில் பல் துலக்கிய 3 வயது சிறுமி பலி

கேரளா: பாலக்காட்டில் 3 வயது சிறுமி, பல் துலக்கும் பேஸ்ட் என்று தவறாக நினைத்து எலி பேஸ்டில் பல் துலக்கியதால் உயிரிழந்தார். அகலி ஜெல்லிபாராவைச் சேர்ந்த லித், ஜோமரியா தம்பதியரின் மகள் நேஹா ரோஸ் என்பவரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பிப்ரவரி 21ஆம் தேதி நடந்தது.
சிறுமி உடனடியாக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நேற்று (மார்ச் 15) சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி