ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ட்ரால் பகுதியில் இன்று(மே.15) காலை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்படுவதற்கு முன் ட்ரோன் மூலம் அப்பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் இருக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.