கர்நாடகா: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆர்சிபி ரசிகர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி வீரர்களுக்கு பெங்களூரு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், சின்னசாமி மைதானத்தின் கேட் எண் 12 இல் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மூவர் உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.