ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விருதுநகரை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சோலையப்பன், அவரது மகன் சோலைச்செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மனைவி விஜயலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.