தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான "My TVK' என்ற புதிய செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று (ஜூலை 30) அறிமுகம் செய்திருந்தார். 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைக்க விஜய் இலக்கு நிர்ணயித்த நிலையில், தற்போது வரை 3 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களுக்கு இது குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, நேர்மையான முறையில் சேர்க்கை நடத்த கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.