மத்திய பிரதேசம் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த பகவத் விஸ்வகர்மாவின் குடும்பத்தில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. மூத்த மகனின் திருமண அழைப்பிதழ் வழங்கும் பணியில் இருந்த நிலையில், இளைய மகன் ராகுல் மற்றும் உறவினர் ஒருவர் உட்பட 3 பேர் பைக்கில் சென்றபோது, கொஷ்த கிராமம் அருகே வேகமாக வந்த சொகுசு கார் மோதியது. இதில் மூவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.