கர்நாடகாவில் வீட்டின் மீது மண் சரிந்து 3 பேர் பலி

கர்நாடக மாநிலம் தீர்த்தஹள்ளி நகரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், வீட்டின் மீது மண் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கி 3 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி

✕
✕