லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி

தூத்துக்குடியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோயில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஆம்னி கார், வெள்ளமடம் அருகே முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 1 பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி