ராணிபேட்டை அருகே கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்தில், வேகமாக சென்ற பைக் ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பைக்கில் சென்ற தினேஷ் (20), சாஜன் (26), பாலமுருகன் (19) ஆகியோர் உயிரிழந்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: குமுதம்