கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் விழுந்தது விபத்து: 3 பேர் பலி

திருவண்ணாமலையில் கிரிவலத்தை முடித்துவிட்டு 4 வழக்கறிஞர்கள் காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்துள்ளது. இதையடுத்து, தீயணைப்புத்துறையினர் கிரேன் உதவியுடன் காரை மீட்ட நிலையில், அதில் பயணம் செய்த 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி