ராட்சத அலையில் சிக்கி 3 பேர் பலி

ஸ்பெயின் நாட்டின் டெனெரிப் தீவு பிரபலமான சுற்றுலா தலமாகும். இந்த தீவில் உள்ள புவெர்ட்டோ டி லா குரூஸ் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ., 09) ராட்சத அலையில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும், அலையில் இழுத்துச் செல்லப்பட்டு பாறைகளில் மோதி 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடற்கரை மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி