தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், நேற்று (ஏப்.20) ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.350 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடைகள் மூடப்படுவதற்கு முன்பாகவே மதுப்பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு மதுபாட்டில்களை வாங்கி சென்றதால், பல இடங்களில் பண்டிகை காலங்களை போன்ற நீண்ட வரிசைகளை காண முடிந்தது.