சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு கிராமத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் மூன்று பசு மாடுகள் உயிரிழந்தன. மேய்ச்சலில் இருந்தபோது ஏற்பட்ட இந்த துயர சம்பவத்தில், விவசாயி சின்னசாமிக்கு சொந்தமான ஒரு பசுவும், லதா என்பவருக்கு சொந்தமான இரண்டு பசுக்களும் பரிதாபமாக உயிரிழந்தன. தங்களின் வாழ்வாதாரமான கால்நடைகளை இழந்த உரிமையாளர்கள், இந்த விபத்தைக் கண்டு கண்ணீர் விட்டு கதறினர்.