மியான்மரில் இன்று (பிப்.15) காலை 8.17 மணியளவில் ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் 100 கி.மீ. ஆழத்தில் பதிவானது. தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை. மேலும், இன்று அதிகாலை 12.26 மற்றும் 12.52 மணியளவில் ரிக்டரில் 3.2 அளவிலான நிலநடுக்கங்கள் முறையே 80 கி.மீ. மற்றும் 25 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டன.