குஜராத்தில் மர்ம வைரஸ் காரணமாக 3 குழந்தைகள் பலி

குஜராத் மாநிலத்தில் உள்ள பஞ்ச்மஹாலில், ஒரே வாரத்தில் 3 குழந்தைகள் மர்ம வைரஸ் காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு குழந்தை வதோதராவில் உள்ள SSG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது சண்டிபுரா வைரஸ் என சந்தேகித்தனர். ஆனால், உயிரிழந்த குழந்தைகளுக்கு அந்த தொற்று இல்லை என தெரியவந்தது. எனவே, மர்ம வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குழந்தைகள் குறித்து ICMR குழு ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி