கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, ஓசியாக மது கேட்டவரை கழுத்தை அறுத்துக் கொன்று புதைத்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கேயம்பாளையம் அருகே 3 பேர் மது அருந்தியுள்ளனர். அப்போது பைக்கில் வந்த ரமேஷ் என்பவர், தனக்கும் மது கொடுக்குமாறு மிரட்டியுள்ளார். இதில், ஏற்பட்ட மோதலில், ரமேஷை மூவரும் கொன்று, தீ வைத்து எரித்து புதைத்துள்ளனர். பின்னர், அவரது பைக்கை கிணற்றில் வீசியுள்ளனர். இதில், பயந்துபோன கொலையாளி ஒருவர், போலீசில் சரணடைந்தார்.