இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (டிச.3) ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்துள்ளது. கே.எல்.ராகுல் 66 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 24 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியுள்ளனர்.