2-வது ஒருநாள் போட்டி: 134 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து அணி

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் 2-வது ஒருநாள் போட்டி வெல்லிங்டனில் இன்று நடந்துவருகிறது. மழை காரணமாக இப்போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து, இந்திய பவுலர்களின் துல்லியமான தாக்குதலை சமாளிக்க முடியாமல் 41 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்சல் 55 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் குர்னூர் பிரார் 4 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி

✕
✕