தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: ருதுராஜ் அபார சதம்

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (டிச.3) ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் விரைவிலேயே அவுட் ஆகினர். இதையடுத்து களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 77 பந்துகளில் சதம் விளாசினார், இது அவரது முதல் சர்வதேச ஒருநாள் சதம் ஆகும். தற்போது இந்தியா 35.4 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி