பொதுத்துறை நிறுவனமான IOB 2026-27-ம் ஆண்டிற்கான 291 பொது மற்றும் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடி, கிரெடிட், ரிஸ்க் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இந்தப் பணிகளுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.1,05,280 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.