நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கடந்த ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகளில் பாஜக வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த தேர்தல் முடிவுகளின்படி முதன்முறையாக 280 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 267 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.