அமெரிக்காவை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 2,790 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், இங்கிலாந்தில் மட்டும் 100 பேர் நாடு கடத்தல் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.