பெங்களூருவில் ஜிம் பயிற்சியாளர் ஒருவர் திடீர் தற்கொலை செய்து கொண்டார். கர்நாடகாவின் பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட்டில் வசித்து வந்தவர் கிரண் (26). இவர் தனது வீட்டில் நேற்று (பிப்., 07) தற்கொலை செய்து கொண்டார். தனது காதலி வேறொரு நபருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதை அறிந்த நிலையில், மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. கிரண் தனது மரணத்திற்கு காதலி மற்றும் அவரது தாயார் தான் காரணம் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதனை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.