பீகார் மாநிலத்தில் முதுகலை பட்டதாரி மாணவர் எழுதிய தேர்வில் 100க்கு 257 மதிப்பெண்கள் பெற்ற சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 மதிப்பெண் கொண்ட செய்முறை தேர்வுக்கு, 225 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. கல்லூரியில் நன்றாக தேர்வு எழுதிய பல மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். பல மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டபோது, தொழில்நுட்பம் மற்றும் ஊழியர்களின் பிழையால் இந்த தவறு நடந்ததாக தெரிவித்துள்ளது.