மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் அணுசக்தி கல்விச் சங்கம் (AEES), இந்தியா முழுவதும் உள்ள தனது பள்ளிகளில் முதல்வர், TGT, PGT, நூலகர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட 254 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 2 முதல் நவம்பர் 22 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.