எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 2 விசைப்படகுடன் கைதான 25 மீனவர்கள் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பின் மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை மீனவர்கள் கண்டித்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி:NewsTamilTV24x7