தமிழ்நாடு முழுவதும் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 25 புதிய இயற்கை பூங்காக்கள் அமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் சட்டப்பேரவையில் இன்று (செப்.7) அறிவித்துள்ளார். கிராமப்புற, நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் தலா ஒரு ஹெக்டேர் பரப்பளவில் இந்த அமைதியான இயற்கைப் பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன.