சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு திருவாங்கூர் தேவஸ்தானம் எங்களிடம் 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகளை கேட்டு இருக்கிறார்கள். அதை ஏற்பாடு செய்து, முதற்கட்டமாக 14-ந்தேதி பிஸ்கெட் பாக்கெட்டுகளை அனுப்ப உள்ளோம். பக்தர்களுக்கு 24 மணிநேரமும் உதவிடும் வகையில் சபரிமலையில் ஒரு அலுவலகத்தை எற்படுத்த உள்ளோம்" என கூறினார்.