அண்டார்டிகாவில் பனிப்பாறைகளுக்கு அடியில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அங்கு தடிமனான பனி அடுக்குக்கு அடியில் சுமார் 207 ரகசிய எரிமலைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை ஒரு "நெருப்பு வளையம்" போல அந்த பகுதி முழுவதும் பரவி இருக்கின்றன. இவை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்பதால் விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.