சேப்பாக்கம் தொகுதியில் யாரை நிறுத்தினாலும் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதால், 2026 தேர்தலில் வேறு தொகுதியில் போட்டியிட உள்ளாரா என்ற கேள்வியெழுந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற திமுக விழாவில் உரையாற்றிய உதயநிதி, "சேப்பாக்கத்தில் இந்த முறை வெற்றி அதிகமான வாக்கு வித்தியாசத்தில் இருக்க வேண்டும். யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் சரி நீங்கள் வெற்றிபெற வைக்க வேண்டும். இந்தமுறை தலைவர் என்னை வேறு தொகுதிக்கு மாற்றினாலும் மாற்றலாம்" என்று கூறியுள்ளார்.