ஹைதராபாத்: நான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, 20 வயது இளைஞர் ஒருவருக்கு உள்ளூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன், 50,000 ரூபாய் அபராதமும், 3 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டது. சில்கூர் சந்தீப் என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர், ராஜேந்திரநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சிறுமியின் பக்கத்து வீடான சந்தீப், அச்சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.