மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் நேற்று எம்-சாண்ட் ஏற்றி வந்த லாரி பிரேக் செயலிழந்து கட்டுப்பாட்டை இழந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சகோதரர்களான சையது அபுதாஹிர் (47) மற்றும் சையது இப்ராஹிம் (45) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ரமேஷை பிடித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி: பாலிமர்