அடுத்தடுத்து மோதிய பஸ்கள்.. 20 பேர் காயம்

திருப்பூர்-அவினாசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல்லகவுண்டம்பாளையம் அருகே ஈரோடு நோக்கி சென்ற 3 பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின. முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் ஒரு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 20 பயணிகள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி