திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெருங்களூரிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு அரசுப் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசாரும் பொதுமக்களும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.