ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு 20 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் OTT தளங்களில் அதிக வீடியோக்களைப் பார்த்து மகிழலாம். இந்த திட்டம் 72 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் பயனருக்கு கூடுதல் 20 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தில் பயனர்கள் ஜியோ டிவிக்கான இலவச அணுகலையும் பெறுவார்கள்.