திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வடுகர்பேட்டை அன்னை நகரில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்கியதில் அவர்கள் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்தவர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் செப்டிக் டேங்கில் இருந்து இளைஞர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் உடல்கள் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.