விருதுநகர்: சிவகாசியில் சாலையில் சண்டையிடுவது போல் நடித்து வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைத்து ரீல்ஸ் எடுத்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அருணாச்சலபுரத்தை சேர்ந்த காளிராஜன் (21), வடபட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் (21) ஆகியோர் சாலையோரம் நின்று சண்டையிடுவது போல் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் வீடியோ வைரலானது. அதைப் பார்த்தபடி பைக்கில் செல்லும் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
நன்றி: புதிய தலைமுறை