பாத்ரூமில் இருந்த தண்ணீர் பேரலில் விழுந்து 2 வயது குழந்தை பலி

சென்னை அம்பத்தூர் அருகே தாத்தா, பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை, பாத்ரூமில் இருந்த தண்ணீர் பேரலில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. குழந்தை நீரில் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி