லடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 2 வீரர்கள் உயிரிழப்பு

லடாக்கில் நமிகா லா கணவாய் அருகே ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் பயணித்த ஓட்டுநர் மற்றும் உடன் சென்ற ராணுவ வீரர் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார்கில் - லே தேசிய நெடுஞ்சாலை 1ல் இன்று (நவ.4) மதியம் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மாவட்ட போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டு, இருவரின் உடல்களையும் பள்ளத்தில் இருந்து மீட்டனர். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது

தொடர்புடைய செய்தி

✕
✕