சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு சென்ற 2 சிறுமிகள் கண்மாயில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரது உடலை பள்ளி முன் வைத்து பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆழிமதுரை கிராமத்தை சேர்ந்த சோபிகா (8), கிஷ்மிகா (4) ஆகிய இருவரும் பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு அருகே உள்ள கண்மாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நன்றி: தமிழ் ஜனம்