அமெரிக்காவின் மினசோட்டாவைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீஸ் அதிகாரிகள் போல் மாறுவேடமிட்டு வந்த நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பெண் சட்டமன்ற உறுப்பினரும், அவரது கணவரும் உயிரிழந்தனர். மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். மேலும் சிலர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.