பெங்களூருவின் மக்கள் தொகை அதிகரிப்பு குறித்து சட்டப்பேரவையில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், ஊரைவிட்டு செல்லாமல் இங்கேயே தங்கிவிடும் 12 எம்.எல்.ஏ-க்களுக்கு இரண்டு திருமணங்கள் நடந்துள்ளன என கூறினார். மேலும், அதற்கான பட்டியல் தன்னிடம் உள்ளது என்றும் கூறியது சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா, இது தேவையற்ற பேச்சு என்றும், அந்த 12 பேரின் பெயர்களை உடனே வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.