வளைகுடா போர் காரணமாக இந்தியாவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் பொதுத்துறை எரிவாயு நிறுவனங்கள் புதிய சர்வதேச ஆதாரங்களில் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை கொள்முதல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், புதிய ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட 2 எல்.என்.ஜி கப்பல்கள் தற்போது இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
நன்றி:ANI